முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
28 August 2020, 2:05 pmகோவையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை டெல்லியில், தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். இதையடுத்து, கோவை திரும்பி அவருக்கு மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சித்தாபுதூர் பகுதியில் பாஜக அலுவலகம் முன்பு நேற்று ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சட்டவிதிகளை மீறி கூட்டத்தைச் சேர்த்ததாக பா.ஜ.க.வினர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 பிரிவுகளின் கீழ் காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
0
0