எனக்கு ஒன்றுமில்லை… நான் நலமாக இருக்கிறேன்…! ப. சி டுவீட்

3 August 2020, 1:32 pm
Chidambaram_UpdateNews360
Quick Share

சிவகங்கை: நான் நலமாக இருக்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தகவல் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து ஆரம்பித்தது கொரோனா. 200 நாடுகளில் இன்னமும் சுற்றிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவிலும் பரவி உள்ள இந்த கொரோனாவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனாவால் கோடிக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பினரையும் மிக கடுமையாக பாதித்து உள்ளது இந்த கொரோனா.

இந்நிலையில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை அவரே தமது டுவிட்டரில் கூறி உள்ளார்.

அறிகுறிகள் இல்லை, வீட்டில் தனிமையில் இருப்பதாக கார்த்தி சிதம்பரம்  தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிவகங்கை தொகுதியில் உள்ள மானகிரி இல்லத்தில் நான் நலமாக இருக்கிறேன் என்று அவரது தந்தையும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் தகவல் தெரிவித்துள்ளார்.

ப. சிதம்பரம் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

கார்த்தி சிதம்பரம் MP கரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நலமாக இருக்கிறார்.

நான் சிவகங்கைத் தொகுதியில் மானகிரி இல்லத்தில் நலமாக இருக்கிறேன். எல்லோருடைய கனிவான கேள்விகளுக்கு நன்றி என்று கூறி உள்ளார்.

Views: - 34

0

0