முன்னாள் அமைச்சர் இந்திர குமாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை : அறக்கட்டளை நடத்துவதாக மோசடி… நீதிமன்றம் அதிரடி
Author: Babu Lakshmanan29 September 2021, 12:42 pm
சென்னை : முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி மற்றும் அவரது கணவர் பாபுவுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1991 ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையில் தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திர குமாரி. இவரது கணவர் பாபு மாற்றுத்திறனாளிகளுக்கான அறக்கட்டளை நடத்துவதாகக் கூறி அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் பெற்று முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. முழுமையாக விசாரணை நடத்தியது.
இது தொடர்பான வழக்கும் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பல்வேறு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் இந்திர குமாரியும், அவரது கணவர் பாபு மற்றும் சண்முகம் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில் வெங்கடகிருஷ்ணன் என்பவர் விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி மற்றும் அவரது கணவர் பாபுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்திரகுமாரி, தற்போது திமுகவில் மாநில இலக்கிய அணிச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1
0