அடேங்கப்பா… உலகமகா நடிப்புடா சாமி… சசிகலாவுக்கு ஆஸ்கரே கொடுக்கலாம் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்..!!

Author: Babu Lakshmanan
16 October 2021, 1:26 pm
sasikala - jayakumar - updatenews360
Quick Share

சென்னை : ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா இன்று மரியாதை செலுத்திய நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக பொன்விழா கொண்டாட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா நினைவிடங்களில் கண்ணீர் சிந்தியபடி, சசிகலா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

sasikala1 - updatenews360

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ” அதிமுகவை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான் காப்பாற்றுவார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தியதன் மூலம் மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்து விட்டேன்,” எனக் கூறினார்.

இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா சென்றது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

jayakumar - updatenews360

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;- அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை. அமமுகவில் தினகரன் வேண்டுமானால் இடம் கொடுக்கலாம். அதிமுகவை கைப்பற்ற நினைப்பது பகல் கனவுதான். சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது. கொடியை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.

Views: - 503

0

0