முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் ரெய்டு… ஒரே நேரத்தில் 57 இடங்களில் சோதனை

Author: Babu Lakshmanan
20 January 2022, 8:46 am
Quick Share

முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் சோதனையை நடத்தி வருகிறது. விஜயபாஸ்கர், தங்கமணி, எஸ்பி வேலுமணி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பலரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளும் திமுக அரசு இதுபோன்ற சோதனைகளை நடத்தி வருவதாக அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட மொத்தம் 57 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

கே.பி. அன்பழகன் மற்றும் அவரது மனைவி, 2 மகன்கள், மருமகள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 248

0

0