நடிகையின் பலாத்கார வழக்கு : முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்

7 July 2021, 11:45 am
Quick Share

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமுன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி விட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, அடையாறு அனைத்து மகளிர் போலீசார் ஜூன் 20ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி மணிகண்டன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், புகார் கொடுத்துள்ள நடிகை நன்கு படித்தவர். எனக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும் அவருக்கு தெரியும். அண்மையில் திருமணம் செய்வதாகக் கூறி உறவு வைத்துக் கொள்வது பலாத்காரம் ஆகாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, தனக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும், எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 2 வாரங்களுக்கு காவல்துறை முன்பு தினமும் ஆஜராக வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மணிகண்டனுக்க ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Views: - 170

0

0