தேர்தலை ஒத்திவைப்பதா..? முற்றுகை போராட்டம் நடத்திய எம்ஆர் விஜயபாஸ்கர் கைது : அதிமுகவினர் உள்ளிருப்பு போராட்டம்..!!

Author: Babu Lakshmanan
22 October 2021, 5:26 pm
karur admk - updatenews360
Quick Share

தேர்தலை ஒத்திவைப்பதாகக் கூறிய தேர்தல் அதிகாரியின் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலின் போது, சில காரணங்களுக்காக தேர்தலை தள்ளி வைப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரி கூறியுள்ளார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர் தேர்தலை நடத்த முடியாது எனக் கூறி விட்டு, அலுவலகத்தை விட்டு வெளியே வந்த தேர்தல் அதிகாரியின் காரை முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து, வெங்கக்கல்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில், காவல்துறை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஏவல் துறையாக செயல்படுவதாக குற்றம் சாட்டி, உள்ளிருப்பு போராட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர்.

Views: - 452

0

0