கனிமொழி மாதிரி எனக்கு மட்டுமல்ல.. பலருக்கும் நடந்துச்சு..! ப. சிதம்பரம் டுவீட்

10 August 2020, 11:48 am
p_chidambaram_updatenews360
Quick Share

சென்னை: திமுக எம்பி கனிமொழிக்கு ஏற்பட்டது போல கசப்பான அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர்  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அவரின் இந்த பதிவு தான் வைரலாகி இப்போது பெருத்த விவாதத்துக்கு வழி வகுத்துள்ளது.

அவர் தமது பதிவில்,  விமான நிலையத்தில் ஒரு விமானநிலைய அதிகாரி என்னிடம் இந்தியனா? என இந்தியில் கேட்டார். எனக்கு இந்தி தெரியாது என்பதால் தமிழ்,ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டேன்.

அப்போது நீங்கள் இந்தியரா? என்று அந்த மத்திய பாதுகாப்பு படை பெண் அதிகாரி கேட்டார். இந்தி தெரிந்தால் இந்தியன் என்பது எப்போது முடிவு செய்யப்பட்டது என்பதை தெரிய விரும்புகிறேன் என்று கூறி இருந்தார்.

அவரது பதிவு பெரும் விவாதத்துக்கு கொண்டு போய் இருக்கிறது. இந் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறி இருப்பதாவது:

திருமதி கனிமொழி MP அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் (official languages) என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும்.

மத்திய அரசு பணியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும என்று அரசு எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.