சாவி மட்டும்தான்… வேறு ஏதும் கிடைக்கவில்லை : எஸ்பி வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விளக்கம்

Author: Babu Lakshmanan
10 August 2021, 6:23 pm
IT raid - dgp - updatenews360
Quick Share

சென்னை : முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் சுமார் 12 மணிநேரம் நடந்த சோதனையில் சாவி மட்டுமே எடுத்துச் செல்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான 35 இடங்களிலும், தமிழகம் முழுவதிலும் சேர்த்து மொத்தம் 52 இடங்களிலும் இன்று காலை 6.30 மணி முதல் சோதனை நடந்தது வருகிறது.

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்சு ஒழிப்புத்துறையினர் சோதனை நடப்பதை அறிந்த தொண்டர்கள், அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால், அசம்பாவிதம் நிகழாமல் இருக்க போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். சுமார் 12 மணிநேரம் நடந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது. சோதனையின் முடிவில் பெட்டகச் சாவி மட்டுமே எடுத்துச் செல்வதாகவும், வேறு ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சான்றழித்து விட்டுச் சென்றுள்ளனர்.

அதேவேளையில், பிற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான சுகுணாபுரம் வீட்டின் முன்பு அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏ எஸ்பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய விசாரணையும் நிறைவடைந்தது.

முன்னதாக, எஸ்பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி சந்தித்து பேசினார்.

Views: - 439

0

0