மீண்டும் சுற்றி வளைக்கப்பட்ட தங்கமணி… 14 இடங்களில் மறுபடியும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு..!!

Author: Babu Lakshmanan
20 December 2021, 9:33 am
Quick Share

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 2வது கட்டமாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் பள்ளிப்பாளையத்தை அடுத்த ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 15ம் தேதி சோதனை மேற்கொண்டனர். அதேபோல, ஈரோடு, கோவை, சென்னை, கரூர், சேலம் உள்பட 9 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் நடத்தினர். இந்த சோதனையில், ரூ.2.16 கோடி ரொக்கமும், 1.13 கிலோ தங்கம், சுமார் 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், பள்ளிபாளையத்தில் உள்ள தங்கமணியின் ஆடிட்டர் செந்தில்குமார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Views: - 412

0

0