முன்னாள் போலீஸ் அதிகாரி, மனைவியை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் : மாநிலம் முழுவதும் பதற்றம்…ராணுவம் குவிப்பு…!!

Author: Babu Lakshmanan
28 June 2021, 10:48 am
j&k killed - updatenews360
Quick Share

ஜம்மு காஷ்மீரில் முன்னாள் போலீஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹரிபரிகம் என்ற கிராமத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி பயஸ் அகமது, மனைவி ராஜ பேகம் ஆகியோரை நேற்று இரவு பயங்கரவாதிகள் வீடு புகுந்து சுட்டுக்கொன்றுள்ளனர். அவர்களின் தாக்குதலில் போலீஸ் அதிகாரியின் மகள் ராபியா பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் போலீஸ் அதிகாரியை வீடுபுகுந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து,அந்த பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு விமானப்படை தளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில், முன்னாள் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 312

0

0