குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்

31 August 2020, 6:07 pm
pranab_mukherjee_updatenews360
Quick Share

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று காலமானார்.

மூளையில் ஏற்பட்ட கட்டியை அறுவை சிகிச்சை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் கொரோனா தொற்றால் அவரின் உடல்நிலை மோசமானது.

அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறி வந்தது. மேலும், அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளதால் சிகிச்சை அளிப்பதில் மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், கடந்த சில நாட்களாகவே அவர் தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி இன்று காலமானதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்திருந்த பதிவில், “மருத்துவர்களின் தீவிர சிகிச்சை, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மக்களின் பிரார்த்தனைகளுக்கு மத்தியில், எனது தந்தை காலமாகி விட்ட செய்தியை கனத்த இதயத்துடன் கூறுகிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 11

0

0