புரட்சி பாரதம் முதல் தற்போது வரை.. 14 வருடம் காத்திருந்த செல்வப்பெருந்தகை : தமிழக காங்கிரஸ் தலைவராக நியமனம்!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2024, 9:45 pm
Cong
Quick Share

புரட்சி பாரதம் முதல் தற்போது வரை.. 14 வருடம் காத்திருந்த செல்வப்பெருந்தகை : தமிழக காங்கிரஸ் தலைவராக நியமனம்!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கே.எஸ்.அழகிரி தொடர்ந்து வரும் நிலையில், அவர் மாற்றப்பட உள்ளதாக கடந்த பல மாதங்களாகவே கூறப்பட்டு வந்தது.

காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை பிடிக்க பல முன்னணி தலைவர்களிடையே போட்டி இருந்து வந்த சூழலில், தற்போது மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் செல்வப்பெருந்தகை.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக சட்டசபையின் பொதுக் கணக்குக் குழு தலைவராக முதல்வர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்டார். மேலும், தமிழ்நாடு அனைத்துக் கட்சி எஸ்.சி/எஸ் டி நலக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார் செல்வப்பெருந்தகை.

செல்வப்பெருந்தகை, தனது அரசியல் வாழ்க்கையை பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சியில் இருந்து தொடங்கினார். பின்னர், புரட்சி பாரதம் கட்சியில் இருந்து விலகி டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியில் இணைந்தார்.

கிருஷ்ணசாமி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியில் இருந்தும் விலகினார் செல்வப்பெருந்தகை. பின்னர் விசிகவில் இணைந்து, மங்களூர் தொகுதியில் போடடியிட்டு எம்எல்ஏ ஆனார். பின்னர் திருமா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்.

அதில் அவருக்கு மாநில பொறுப்பு கொடுக்கப்ப்டடாலும், சுமார் 2 ஆண்டுகள் அக்கட்சியில் இருந்த அவர், பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

2010ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் உள்ள அவர், 2011 சட்டசபை தோதலில், செங்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016 தேர்தலிலும் தோல்வியை தழுவிய அவர், 2021 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏ ஆனார்.

Views: - 223

0

0