சர்வதேச விமான சேவை தடை மேலும் நீட்டிப்பு

26 November 2020, 11:01 pm
Quick Share

மும்பை : சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, அடுத்த மாத இறுதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மார்ச்சில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, அனைத்து விமான சேவைகளும், மார்ச், 23 லிருந்து நிறுத்தி வைக்கப்பட்டன. பின், வைரஸ் பாதிப்புகள் குறைந்ததை தொடர்ந்து, மே மாதம், உள்நாட்டு பயணியர் விமான சேவைகள் மட்டும் துவங்கப்பட்டன. வெளிநாடுகளில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த தடை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Views: - 21

0

0