விநாயகர் சதுர்த்தி விவகாரம் : அரசுக்கு எதிராக கொந்தளித்த மதுரை ஆதீனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2021, 9:01 pm
Quick Share

விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில் மீண்டும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி இருக்கிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே இந்த வருடமும் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் நடத்துவதை தமிழக அரசு தடை செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடும் விழாக்கள், பண்டிகைகளில் முதன்மையாக இருப்பது விநாயகர் சதுர்த்தி என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வருகிற 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

Tamil Nadu Tables Interim Budget Ahead Of Assembly Elections

இந்த நிலையில்தான், “விநாயகர் சதுர்த்தியின்போது வீடுகளில் பிள்ளையாரை வைத்து வழிபட்ட பிறகு நீர்நிலைகளில் கரைக்கலாம்” என்று தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார்.

“விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் கொரோனா தொற்று காரணமாக நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இது மாநில அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல. மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியபடியே இந்த உத்தரவு தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். அரசியல் செய்ய எவ்வளவோ வழிகள் உள்ளது. ஆனால் இதுபோன்று மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் செய்ய நினைத்தால் தமிழக அரசு அதை அனுமதிக்காது.சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Tamil Nadu: Minister Sekar Babu's remark on 'North Indians' lands him in  soup | India News,The Indian Express

தமிழக அமைச்சர் இப்படி கடுமையாக எச்சரிக்கை விடுத்து இருப்பதற்கு இரண்டு பின்னணி காரணங்கள் உண்டு.

அண்மையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். தி.மு.க அரசு விநாயகரைக் கையில் எடுத்து அரசியல் செய்தால், அதே விநாயகர் தி.மு.க அரசு முடிவுக்கு வருவதற்கு முடிவுரை எழுதுவார்” என்று காட்டமாக கருத்து தெரிவித்து இருந்தார்.

Why Annamalai was chosen over senior leaders to lead BJP in Tamil Nadu |  The News Minute

“அண்டை மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கொடுக்கும்போது தமிழகத்தில் மட்டும் மறுப்பது ஏன்? கடவுள் சிலை செய்வது சட்டப்படி குற்றமா? தமிழர்கள் தங்களின் விருப்பமான கடவுளை வழிபட அனுமதி வேண்டும். பாஜகவின் சார்பில் ஒரு லட்சம் வீடுகளின் வாசலில் விநாயகர் சிலை வைத்து அகவல் பாடி வழிபடவுள்ளோம். நமது முதலமைச்சருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி வைப்போம். ஈ.வெ.ரா., பிறந்த தினத்தை தமிழக அரசு சமூக நீதி நாளாக அறிவித்துள்ளது. இதை தமிழக பாஜக வரவேற்கிறது. அதேநேரம், அவருக்கு முன்பாகவே தமிழகத்தில் சமூக நீதிக்காகப் பாடுபட்ட, போராடிய பாரதியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட தலைவர்களை தி.மு.க., மறந்துவிட்டது” என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.

அடுத்ததாக அண்மையில் 293-வது மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுக்கொண்ட
ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் செய்தியாளர்களிடம் பேசும்போது, விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுவெளியில் கொண்டாடுவதற்கு திமுக அரசு தடை விதித்திருப்பது பற்றி பகிரங்கமாக தனது அதிருப்தியை பதிவு செய்தார். விநாயகர் சதுர்த்தி விழா மட்டுமன்றி தமிழக அரசு பல விஷயங்களில் பாரபட்சமாக செயல்படுவது குறித்து மனம் கொந்தளித்து சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

நித்யானந்தா பொருட்டே இல்ல.. மதுரை ஆதினத்துக்குள் வந்தால் கைதுதான்.. 293-ஆவது  மடாதிபதி எச்சரிக்கை.! | Nithyananda is not in order .. If he enters Madurai  Adinath, he will be ...

சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவரும் கப்பலோட்டிய தமிழருமான வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, “விநாயகர் சதுர்த்தி ஒரு சமயத்திற்கு மட்டுமான விழா அல்ல. இது ஒரு சமுதாய விழா. மக்களிடம் தேசபக்தியை ஏற்படுத்தியது, விநாயகர் சதுர்த்திதான். இந்த விழாவை அரசு நடத்த வேண்டும் என்பது எனது கருத்து. விநாயகர் சதுர்த்தி இன்றல்ல நேற்றல்ல, வெள்ளையர்களை எதிர்த்து கொண்டாடப்பட்ட விழா. அதற்கு தடை விதித்திருப்பது சரியல்ல.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிறது அரசு. அதேபோல் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களில் தமிழில் அர்ச்சனை நடத்தி அவர்களை ஒற்றுமைப்படுத்த முடியுமா? ஒவ்வொரு மதங்களிலும், பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவர்களுக்குள்ளும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆகவே, ஒரு மதத்தில் மட்டும் அனைத்து விஷயத்தையும் புகுத்துவது தவறு. அனைத்து சமுதாய மக்களையும் ஒற்றுமைப்படுத்தவேண்டும்.

தற்போது நாட்டில் உள்ள அனைவருக்கும் தேசப்பற்று குறைந்துவிட்டது. தெய்வபக்தி பணத்தில்தான் உள்ளது. வ.உ.சிதம்பரனாரைபோல் தேசப்பற்றும் தியாக மனப்பான்மையும் இன்றைய இளைஞர்களிடம் இல்லை.

PIB India on Twitter: "#Aazadi70Saal: Check out #PIB's blogpost on V.O.  Chidambaram Pillai - The Tamil Helmsman https://t.co/zkNSNrfm2K… "

அவர்கள் எதையோ இழந்ததை போல் அலைந்து திரிகிறார்கள். அதற்கு காரணம் அரசியலும், சினிமாவும்தான். பாஸ் மார்க் வாங்காத மாணவர்களும் டாஸ்மாக் சென்று சரக்கு வாங்குகிறார்கள்.

இந்த மது ஒழிக்கப்பட வேண்டும். பெண்கள் ரோட்டில் நடமாட முடியவில்லை. நம் நாட்டினுடைய பண்பாடு கலாச்சாரம் அழிந்து கொண்டு வருகிறது. டாஸ்மாக்கை வைத்துத்தான் அரசாங்கத்தை நடத்தவேண்டும் என்ற தேவை இல்லை. அந்த கடைகளையெல்லாம் அடைக்க வேண்டும்.

சுதந்திரம் அடைந்து நீண்ட காலங்களுக்கு பின் தற்போது வ.உ.சிதம்பரனாருக்கு தமிழக அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இது மிக மிகத் தாமதமான ஒன்று” எனக் குறிப்பிட்டார்.

இவைதான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் திடீர் ஆவேசத்துக்கு காரணம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

Karuppu Muruganantham BJP tamil nadu secretary: chennai vinayagar oorvalam

விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலங்களை நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது பற்றி, சமூக ஆர்வலர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைக்கின்றனர். அவர்கள் கூறும்போது, “மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறி முறைகளின் அடிப்படையில்தான், கொரோனா பரவாமல் தடுக்க விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார். அதாவது மத்திய அரசின் உத்தரவுக்கு அப்படியே கட்டுப்பட்டு நடப்பது போல் அவருடைய கருத்து உள்ளது.
மற்ற எல்லா விஷயங்களிலும் மத்திய அரசை கண்டித்து செயல்படும் திமுக அரசு இந்த விஷயத்தில் மட்டும் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி சமர்த்தாக நடந்து கொள்வது வேடிக்கையான ஒன்றுதான்.

மேலும் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபட எந்தத் தடையும் இல்லை என்று அமைச்சர் கூறுகிறார். இது அதை விட மிகவும் நகைச்சுவையாக உள்ளது. வீட்டில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு அரசின் அனுமதியை பெற வேண்டுமா என்ன? என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது.

கடந்த ஆண்டு இதே மாதம் தமிழகத்தில் இருந்த கொரோனா பரவல் நிலையை திமுக அரசு ஒப்பிடுகிறது. சென்ற வருடம் இதே செப்டம்பர் மாதம் தமிழகத்தில் அன்றாட கொரோனா பாதிப்பு சுமார் 6 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. தற்போது 1500தான் உள்ளது. மேலும் கடந்த ஆண்டு கொரோனாவுக்கு தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவேயில்லை. ஆனால் இந்த மார்ச் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 84 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது திமுக அரசு ஏன் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுவெளியில் கொண்டாட தடை செய்கிறது என்பது புரியவில்லை.

Tamil Nadu School Reopen Date: State Govt permits Class 10th, 12th classes,  hostels to start operating again; check details | Zee Business

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாநிலத்தில் இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மீன், இறைச்சி விற்பனை, ஆடு, மாட்டுச் சந்தைகளும்
திறக்கப்பட்டு விட்டன.

டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைந்தபாடில்லை. காலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் டவுன் பஸ்களில் முண்டியடித்துக் கொண்டு பயணம் செய்வதைக் காண முடிகிறது. மின்சார, பயணிகள் ரயில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. இங்கெல்லாம் கொரோனா பாதிப்பு ஏற்படாதா என்ன?…

Vinayagar Chaturthi Oorvalam || Ganesh immersion in erode 2017 | Celebrated  in Tamil nadu - YouTube

இதுபோன்ற சூழலில் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுமாறு கூறி விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து இருக்கலாம். இதில் சமூக பிரச்னையும் இருக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகைகளையொட்டி மண்பாண்டத் தொழிலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள் சிறு சிறு சாமி சிலைகள், பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபடுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்ததால் அந்த தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்த வருடமும் அவர்களின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இனி நிரந்தரமாகவே அந்த தொழிலை அவர்கள் கைவிடும் நிலையும் கூட உருவாகலாம். ஏற்கனவே தமிழகத்தில் மண்பாண்ட தொழில் 70% ஒழிந்துவிட்ட நிலையில் அத்தொழிலில் ஈடுபட்டு வரும் எஞ்சிய தொழிலாளர்கள், கலைஞர்களின் குடும்பங்களை இது வறுமை நிலைக்குத் தள்ளிவிடும். பெரிய பெரிய களிமண் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் போதுதான் ஆண்டுக்கு ஒரு முறை அவர்களுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும். தமிழக அரசின் தடையால் இனி அவர்களின் பாடும் திண்டாட்டம்தான். எனவே மராட்டியம், கர்நாடகா, புதுச்சேரி போல தமிழகத்திலும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கவேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.

“இனி வீட்டில் சமைத்து சாப்பிடுவதற்கு கூட தமிழக அரசின் அனுமதியைப் பெறவேண்டும் என்று சொல்வார்கள் போலிருக்கிறது” என்று நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர்.

Views: - 169

0

0