ஊரடங்கை மீறுவோரை சுட்டுத்தள்ளுங்க..! ரூ. 5100 பரிசு தரேன்…! எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

26 March 2020, 7:09 pm
corona-updatenews360
Quick Share

காசியாபாத்: ஊரடங்கை மீறினால் சுட்டு தள்ளுங்கள், அவர்களுக்கு ரூ.5100 பரிசு வழங்கப்படும் என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகில் பெரிய பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 200 நாடுகளுக்கும் மேலாக பரவி 22000 பேரை பலி வாங்கி இருக்கிறது.

இந்தியாவில் 681 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 13  பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா பரவுவதை தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஊரடங்கை மீறுபவர்களைச் சுட்டால் ரூ.5100 பரிசு தருவதாக பாஜக எம்எல்ஏ ஒருவர் அறிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் தொகுதி பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜார் தான் இப்படி பேசி இருக்கிறார். ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் தொடர்பாக அவர் பேசிய வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதில் அவர் பேசி இருப்பதாவது: ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் கால்களை போலீசார் உடைக்க வேண்டும். சொல்வதை கேட்க மறுத்தால் கால்களில் சுடுங்கள்.

அவர்களை தேச விரோதிகள் போன்று நடத்த வேண்டும். அரசின் உத்தரவை பின்பற்றவில்லை என்றால் அவர்கள் தீவிரவாதிகள். விதி மீறுபவர்களின் கால்களை உடைப்பவர்களையும், அவர்களை சுட்டு தள்ளும் போலீசாருக்கும் ரூ.5100 பரிசு தருவேன் என்று பேசி இருக்கிறார். 

Leave a Reply