த.மா.கா., துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார் : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

15 January 2021, 3:12 pm
gnanadesikan- updatenews360
Quick Share

சென்னை : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் இன்று காலமானார்.

கடந்த நவம்பர் 11ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞானதேசிகன் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

கடந்த 2001ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தமிழகத்தில் இருந்து இரு முறை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2009ம் ஆண்டு முதல் 2013 வரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிய்ன தலைவராகவும் இருந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவில்லிப்புத்தூரைப் பூர்வீகமாக கொண்ட ஞானதேசிகனுக்கு திலகவதி என்னும் மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞானதேசிகனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 0

0

0