கோவா முதலமைச்சருக்கு கொரோனா தொற்று : தனிமைப்படுத்திக் கொண்டார் பிரமோத் சவந்த்..!

2 September 2020, 12:14 pm
goa cm -pramod-sawant - updatenews360
Quick Share

கோவா முதலமைச்சர் பிரமோத் சவந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவா மாநிலத்தில் இதுவரை 17,418 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13,577 பேர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். 192 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.அம்மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பிரமோத் சவந்த் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு தனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோவா முதலமைச்சர் பிரமோத் சவந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். வீட்டில் இருந்தவாறே அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 8

0

0