கொரோனா பீதியால் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடுகள் தனிமைப்படுத்தல்..! கர்நாடகாவில் பரபரப்பு..!

30 June 2020, 8:27 pm
goat_updatenews360
Quick Share

கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 50 ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் கொரோனா பீதியால் தனிமையில் வைக்கப்பட்டுள்ளன.

தும்கூர் மாவட்டத்தில் உள்ள கொல்லரஹட்டி தாலுகாவில் கோடேகேர் எனும் கிராமத்தில் சில ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு சுவாசப் பிரச்சினைகள் இருப்பதைக் கவனித்த கிராம மக்கள் பீதியடைந்தனர் என்று மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், “ஆடு மேய்ப்பவர் வளர்த்த சில விலங்குகளில் சுவாசப் பிரச்சினைகள் அதிகமாகின. இப்போது எல்லா இடங்களிலும் கொரோனா பயம் இருப்பதால், விலங்குகளும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன என்று மக்கள் பயப்படுகிறார்கள்.” என தெரிவித்தார்.

பின்னர் கிராம மக்கள் கர்நாடக சட்ட அமைச்சராக இருக்கும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜே சி மதுசாமி மற்றும் மாவட்ட துணை ஆணையர் கே.ரகேஷ்குமார் ஆகியோரின் உதவியை நாடி விசாரித்தனர்.

இதையடுத்து துறை அதிகாரிகள் கிராமத்திற்கு விரைந்து சென்று மாதிரிகள் சேகரித்ததைத் தொடர்ந்து இது குறித்து விசாரிக்குமாறு கால்நடை வளர்ப்பு துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

விலங்குகள் ஆடுகளுக்கான பிளேக் நோய் என்று அழைக்கப்படும் பெஸ்டே டெஸ் பெட்டிட்ஸ் ரூமினண்ட்ஸ் மற்றும் மைக்கோபிளாஸ்மா நோய்த்தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

விலங்குகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் போபாலில் உள்ள விலங்கு சுகாதார மற்றும் கால்நடை உயிரியல் நிறுவனம் மற்றும் கால்நடை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

பெஸ்டே டெஸ் பெட்டிட்ஸ் ரூமினண்ட்ஸ் மற்றும் மைக்கோபிளாஸ்மாவும் தொற்றுநோய்கள் என்பதால் பிற விலங்குகளுக்கும் பரவக்கூடும் என்பதால் விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply