விவசாயிகள் நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி : முதலமைச்சர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு

26 February 2021, 12:32 pm
CM - Updatenews360
Quick Share

விவசாயிகளின் நகைக்கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதை உணர்ந்து, சுமார் ரூ.12,000 கோடி அளவிலான பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், 24 மணி நேரமும் மும்முனை தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். அதோடு, அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது, 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் உள்ளிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மற்றுமொரு முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

அதாவது, அவர் கூறியதாவது :- கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் நகைகளை அடகு வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடனும் தள்ளுபடி செய்யப்படும், என தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழு பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Views: - 66

0

0