‘அடி போடு’….3வது நாளாக சரிந்த தங்கம்…! ரூ.408 குறைவு…சவரன் எவ்வளவு தெரியுமா..?

11 August 2020, 10:44 am
Gold Rate - Updatenews360
Quick Share

சென்னை : கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை 3வது நாளாக இன்றும் சரிந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடே முடங்கி கிடக்கிறது. இதனால், திருமணம் உள்ளிட்ட எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளும் நடத்துவது குறைந்துவிட்டது. அப்படி மீறி நடந்தாலும் எளிய முறையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தங்கத்தின் இறக்குமதியும் குறைந்துவிட்டது.

இருப்பினும், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டதாக உள்ளது. கடந்த இரு வாரத்திற்கும் மேலாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், 3வது நாளாக தங்கத்தின் விலை இன்றும் சரிந்துள்ளது. அதாவது, கிராமுக்கு ரூ. 51 குறைந்து ரூ. 5,314 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.408 சரிந்து ரூ. 42,512க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 அதிகரித்து ரூ.84.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து, உச்சம் பெற்று வந்த தங்கம் விலை இன்றும் சற்று குறைந்திருப்பது பொதுமக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்துள்ளது.