‘தங்கம் வாங்கும் ஐடியா இருக்கா.. அப்ப இப்பவே கிளம்புங்க…!’ இன்றும் ரூ.320 குறைந்தது

23 September 2020, 10:48 am
Quick Share

இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

இதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும் இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாம் பூச்சி விளையாடி வருகிறது

அந்த வகையில், கடந்த வார இறுதியில் ஏற்றத்துடன் தங்க வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த நிலையில், இந்த வாரத்தை வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் தொடங்கிய தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது.

காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.40 சரிந்து ரூ.4,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,400 குறைந்து ரூ. 62,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 14

0

0