ஆபரணம் வாங்கும் கனவையே அழித்த தங்கம் விலை : இன்றும் சவரனுக்கு ரூ.224 உயர்வு

1 August 2020, 10:50 am
Gold Silver Rate- updatenews360-min
Quick Share

சென்னை : நாடு முழுவதும் தங்கம் வாங்கும் சூழல் இல்லாத நிலையிலும், இதுவரை இல்லாத வகையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால், திருமணம் உள்ளிட்ட எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளும் நடத்துவது குறைந்துவிட்டது. அப்படி மீறி நடந்தாலும் எளிய முறையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தங்கத்தின் இறக்குமதியும் குறைந்துவிட்டது.

இருப்பினும், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டதாக உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஏறுமுகமாகவே இருந்து வரும் தங்கத்தின் விலை இன்று உச்சத்தை தொட்டுள்ளது.

இன்று காலை வர்த்தக நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.28 உயர்ந்து ரூ.5,178ஆகவும், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.224 அதிகரித்து ரூ. 41,424க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

நாள்தோறும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்று அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், தங்கம் விலையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இனி வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை இன்னமும் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் கூறியிருப்பது பொதுமக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 67

0

0