நம்பவே முடியாத அளவிற்கு குறைந்த தங்கத்தின் விலை : சவரனுக்கு ரூ. 1,464 சரிவு

17 October 2020, 11:46 am
gold - updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் தங்கத்தின் விலை, முதல்முறையாக இன்று ஒரே நாளில் ரூ.1,464 குறைந்துள்ளது.

நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

இதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும், இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாம் பூச்சி விளையாடி வருகிறது

கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் தங்கத்தின் விலை, முதல்முறையாக ஒரே நாளில் ரூ.1,464 குறைந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.183 சரிந்து ரூ.4,680-க்கு விற்பனையாகி வருகிறது.

Leave a Reply