போக்கு காட்டும் தங்கம் விலை…! 5 நாட்களுக்கு பிறகு இன்று உயர்வு..!

14 August 2020, 11:05 am
Gold - UpdateNews360
Quick Share

சென்னை : கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடே முடங்கி கிடக்கிறது. இதனால், திருமணம் உள்ளிட்ட எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளும் நடத்துவது குறைந்துவிட்டது. அப்படி மீறி நடந்தாலும் எளிய முறையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தங்கத்தின் இறக்குமதியும் குறைந்துவிட்டது.

இருப்பினும், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டதாக உள்ளது. கடந்த இரு வாரங்களாக ஏறு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த 5 நாட்களாக இறங்கி வந்தது.

இந்த நிலையில், இன்று காலையில் சவரனுக்கு ரூ.280 அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ. 35அதிகரித்து ரூ. 5,111ஆக விற்பனையானது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.280 உயர்ந்து ரூ. 40,888க்கும் விற்பனையானது.