தமிழகத்தில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி: தமிழக அரசு உத்தரவு…!!

22 November 2020, 3:15 pm
tn gvt - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கலாச்சார நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்கலாம்

மூடப்பட்ட அறை அல்லது அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் 50 சதவிகித நபர்களுக்கு மிகாமல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி, கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து கலாசார நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம்.

முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும், அரசியல் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0