மண் அள்ளுவதற்கு அரசு அனுமதி.. தமிழகம் பாலைவனம் ஆகும்!கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2021, 9:31 pm
Sand DMK - Updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய பாப்பிரெட்டிபட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ. கோவிந்தசாமிக்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மண் எடுப்பது குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் கூறும்போது, “தமிழகம் முழுவதும் மண்பாண்டம் செய்பவர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், நிலம் மேம்படுத்த வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள், சாலை மேம்படுத்த மண் எடுப்பவர்களுக்கு தற்போது அதற்கான சூழல் இல்லாத காரணத்தால், கோரிக்கை வைத்தார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பிரச்சினை தீர்க்கப்படும் என்று தேர்தல் காலத்தில் தற்போதைய முதலமைச்சரும் கூறியிருந்தார். அந்த பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது.

மண் எடுப்பதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் கடந்த பிப்.12-ம்தேதி தீர்ப்பு வந்தது.

மண் எடுக்க அனுமதிக்கும் முன்பு, கனிமத்தில் உள்ள கூறுகளை அறிய அனுமதிக்கப்பட்ட ஆய்வுக் கூடங்களில் மண்ணை பரிசோதிக்கவேண்டும். குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதிபெற வேண்டும் என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஆலோசித்து, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் அனுமதிக்கு சென்றால் இப்போதைக்கு வராது. ஆனால், அரசுக்கே சாலைப் பணி, அணை கட்ட, கட்டிடப் பணிகளுக்கு மண் தேவைப்படுகிறது. எனவே, சாலைப் பணிகள், கட்டிடப் பணிகள் தடையின்றி நடைபெற, சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண்எடுக்க அனுமதி வழங்கி, கடந்த ஜூலை 30-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, 1.5 மீட்டருக்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது, கனிமவளங்களை எடுப்பது ஆகாது என்பதால் 1.5 மீட்டர் வரை மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

Since the curfew was announced during the season Pottery workers without  income are starving. || சீசன் நேரத்தில் ஊரடங்கு:வருமானம் இன்றி தவிக்கும் மண்பாண்ட  தொழிலாளர்கள்

எனவே மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் நில மேம்பாட்டுக்கு மண் எடுப்பவர்கள், சாலைப் பணியில் ஈடுபடுபவர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம். அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தவேண்டும்” என்று தெரிவித்தார்.

செங்கல் சூளைகள் நேற்று முதல் செயல்பட தொடங்கியது! - Dina Seithigal |  DailyHunt

2 நாட்களுக்கு முன்புதான் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தலைநகர் சென்னையில் நடைபெறும் மணல் திருட்டு குறித்து அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், “கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்து வருவது தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் 1 கிமீ தொலைவில். ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சாலையின் வழியாக லாரி லாரியாக மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், இந்த மணல் கட்டுமானத்திற்கு உகந்தது அல்ல. இம்மணலைக் கொண்டு கட்டடம் கட்டினால் நிச்சயம் இடிந்து விழுந்துவிடும் என்கிறார்கள், கட்டுமான நிபுணர்கள்.

Coimbatore South: Kamal Haasan could divide anti-incumbency votes, benefit  BJP - Hindustan Times

அப்படியெனில், இந்த மணலை அள்ளி கட்டிடங்கள் கட்டிய மகானுபாவர்கள் யார்? அவற்றைப் பயன்படுத்தப் போவது யார்? அதில் வாழப் போகிற மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு?… அனுமதி இல்லாமல் திருடுகிறார்களே என்று வருந்துவதா? அரசுக்கு வருவாய் இழப்பு என்று வருந்துவதா? அரசு இயந்திரம் உறங்கிக்கொண்டிருக்கிறதே என்று வருந்துவதா? ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடர்கிறதே என வருந்துவதா? சூழியல் சீரழிகிறதே என்று வருந்துவதா? இந்த மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்படப் போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா?” என்று கவலையுடன் குறிப்பிட்டு இருந்தார்.

நடிகர் கமல் இப்படி வேதனைப்பட்டு அறிக்கை விடுத்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில்தான் தற்போது சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவித்து இருக்கிறார்.

இது சமூக ஆர்வலர்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக முன்னெடுத்த பெரும்பாலான போராட்டங்களுக்கு தீவிர ஆதரவு தெரிவித்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூட திமுக அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது, என்பதுதான் இதில் ஆச்சர்யமான விஷயம்!

green wall: பசுமை பெருஞ்சுவர் திட்டம்... இப்படியும் ஆபத்தாகலாம்.. மக்களே  உஷார் - great green wall should not disturb existing forest | Samayam Tamil

அந்த அமைப்பின் நிர்வாகியான சுந்தர்ராஜன் தனது டுவிட்டர் பதிவில், “சுற்றுச்சூழல் அனுமதியில்லாமல் ஆற்று மணல் எடுக்கலாம் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உலகெங்கிலும் உள்ள நீர்நிலைகளில் இருக்கின்ற தண்ணீரைவிட ஆற்று மணலில் உள்ள நீரின் அளவு அதிகம். காலநிலை மாற்றம் மழைப்பொழிவை தீவிரமாக்கும், இந்த தருணத்தில் நிலத்தடி நீரை பாதுகாப்பது அவசியம். அதில் மணல் முக்கிய பங்காற்றுகிறது. ஏற்கனவே நடைபெற்ற மணல் கொள்ளையை சரி செய்யவே பலநூறாண்டுகள் ஆகிவிடும் என்று தெரிவித்து வந்த நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டை பாலைவனமாக்கி விடும் எனபது உறுதி. இந்த முடிவை கைவிட வேண்டும் என கோருகிறோம்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.

தமிழக அரசின் அறிவிப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என்று அமைச்சர் பொதுவாக கூறி இருக்கிறார். மணல் என்ற வார்த்தையை அவர் நேரடியாக பயன்படுத்தாவிட்டாலும் கூட பொதுவாக மண் என்கிறபோது அது ஆற்று மண்ணையும் சேர்த்தே குறிக்கும்.

சுமார் ஒன்றரை மீட்டர் ஆழத்திற்கு, மண்ணை எடுக்கலாம் என்று அரசு கூறுகிறது. ஆனால் இந்த அளவுக்கும் கீழாக தோண்டி மண் எடுக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அதேபோல் கண்காணாத இடங்களில் மண் எடுப்பதை கண்காணித்து அதை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு யார் கொண்டு செல்வார்கள் என்பதும் கேள்விக்குறிதான்.

Coronavirus | A worrying signal from the Secretariat - The Hindu

மண்பாண்டத் தொழில் செய்பவர்களும், செங்கல் சூளை வைத்திருப்பவர்களும் வைத்த வேண்டுகோளை ஏற்று இந்த முடிவுக்கு அரசு வந்திருப்பதாக கூறுகின்றனர். தமிழகத்தில் மண்பாண்டக் கலைஞர்கள் 30 ஆயிரம் பேர் வரை உள்ளனர்.

இவர்களுடைய பிரதான தொழில் மண்பாண்டங்கள் செய்வது தவிர சிறு சிறு பொம்மைகள், பெரிய மண் சிலைகள் தயாரிப்பதும் ஆகும். ஆனால் விநாயகர் சதுர்த்தி நேரத்தில் மண் மற்றும் காகித கூழ் சிலைகளை தயாரித்து பொது வெளியில் விற்பனை செய்ய விடாமல் அரசு தடுத்துவிட்டது. அவர்களுக்கு மழைக் காலத்தில் ஊக்கத் தொகையாக மேலும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Pottery going places through rural women

அதேநேரம் அக்டோபர் 31-ந் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. அதுவரை திருவிழாக்கள், மதம், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த தொடர்ந்து தடையும் நீடிக்கிறது.

இதனால் மண்பாண்டக் கலைஞர்கள் நவராத்திரி பண்டிகைக்காக கொலு பொம்மைகள் தயாரிப்பதும் இப்போதே முடங்கிப் போய்விட்டது. அவர்களுடைய தொழில் வருடத்தில் எல்லா நாட்களிலும் நடந்தால்தான் அவர்களால் வாழ்க்கையை நகர்த்த முடியும். எனவே மண் சிலைகள், பொம்மைகள் தயாரிக்கும் மண்பாண்டக் கலைஞர்கள் பொது இடங்களில் அவற்றை வைத்து விற்பனை செய்வதை அனுமதிப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் வழி பிறக்கும்.

கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட திமுக மாவட்ட பிரதிநிதிக்கு சொந்தமான  லாரிகள் !! - Amma Express - News

1.5 மீட்டர் ஆழத்திற்கு மண் எடுக்கலாம் என்பது செங்கல் சூளை வைத்திருப்பவர்களுக்கு உதவலாம். எனினும் செங்கல் விலை குறையுமா? அல்லது குறைக்கப்படுமா? என்பது சந்தேகம்தான். எனவே செங்கல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஏற்கனவே ஒன்றரை மீட்டர் ஆழத்தில் மண் எடுக்கலாம் என்பது நடைமுறையில் இருந்தநேரத்தில் ரயில் மற்றும் சாலைவழி ஆற்றுப் பாலங்களின் தூண்களுக்கு அடியில் மண் எடுக்கப்பட்டு
பல பாலங்கள் அபாய நிலையில் உள்ளன. இப்போதும் அதேபோல் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால் இதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 341

0

0