அரசு தொடங்கும் புதிய கல்லூரிகளில் இந்துக்களுக்கு மட்டும் வேலை : ட்விட்டரில் ட்ரெண்டாகும் #சங்கி_ஸ்டாலின்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2021, 4:26 pm
Stalin Hastag - Updatenews360
Quick Share

இந்து அறநிலையத்துறை சார்பாக தொடங்கப்படும் கல்லூரிகளில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை என்ற அரசின் அறிவிப்பால் டிவிட்டரில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கூடுதலாக சென்னை, திண்டுக்கல், நாமக்கல், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதற்கான பேராசிரியர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

ஆனால் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையால் தொடங்கப்படும் கல்லூரிகளில் இந்துக்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக அமையும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சமூக வலைளதளங்களான டிவிட்டரில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது.

மேலும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நெட்டிசன்கள், சங்கி என்ற அடைமொழியை ஸ்டாலினுடன் சேர்த்து வைத்து விமர்சனங்கள் எழுப்பியுள்ளனர். டிவிட்டரில் #சங்கி_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரெண்டு செய்து வருகின்றனர்.

Views: - 249

1

0