IIT நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவன்… முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!!!

Author: Babu Lakshmanan
28 October 2021, 11:48 am
Quick Share

சென்னை : அரசு பள்ளியில்‌ பயின்று ஐஐடி நுழைவுத்‌ தேர்வில்‌ வென்ற அருண்குமார்‌ என்ற மாணவனின்‌ கல்விக்‌ கட்டணத்தை அரசே ஏற்கும்‌ என்று முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி மாவட்டம்‌, மருங்காபுரி ஒன்றியம்‌, கரடிப்பட்டி கிராமத்தைச்‌ சேர்ந்த பொன்னழகன்‌, பூவாத்தாள்‌ தம்பதியரின்‌ மகன்‌ அருண்குமார்‌, செவல்பட்டி அரசு மேல்நிலைப்‌ பள்ளி மாணவர்‌. இவர்‌, இந்த ஆண்டு ஹைதராபாத்தில்‌ உள்ள இந்திய தொழில்நுட்பக்‌ கழகத்தில்‌ (IIT-ஹைதராபாத்‌) பொறியியல்‌ படிப்பு படிப்பதற்கான நுழைவுத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்றுள்ளார்‌.

மாணவர்‌ அருண்குமாரை முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ இன்று நேரில்‌ வரவழைத்து பாராட்டி வாழ்த்தினார்‌. எளிய பின்புலத்திலிருந்து வந்து, அரசுப்‌ பள்ளியில்‌ படித்து இச்சாதனையை நிகழ்த்திய மாணவரைப்‌ பாராட்டிய மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, அவரது மேற்படிப்புக்கான கல்விச்‌ செலவு முழுவதையும்‌ தமிழ்நாடு அரசே ஏற்கும்‌ என
உறுதியளித்தார்‌, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 273

0

0