4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்..!!

4 November 2020, 11:47 am
TN Governor- Updatenews360
Quick Share

சென்னை : 4 நாள் பயணமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லிக்கு இன்று புறப்பட்டு சென்றார்.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அண்மையில் ஒப்புதல் வழங்கினார். இதன்மூலம், ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நனைவாகியது. ஆளுநரின் இந்த நடவடிக்கை நன்றி தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில், 4 நாள் பயணமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். 7ம் தேதி வரை டெல்லியில் தங்கியிருந்து குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை ஆளுநர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 15

0

0

1 thought on “4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்..!!

Comments are closed.