குடியரசு துணை தலைவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று சந்திப்பு

5 November 2020, 12:50 pm
TN Governor- Updatenews360
Quick Share

டெல்லி : டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று சந்தித்துப் பேசுகிறார்.

பரபரப்பான அரசியல் சூழலில் 3 நாள் பயணமாக நேற்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித். அங்கு முதலில் பிரதமர் மோடி, அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புகளின் போது நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், வழக்கமான சந்திப்புதான் இது என அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்புகளுக்கு பிறகு ஆளுநர் நாளை சென்னை திரும்புகிறார்.

Views: - 19

0

0