வசந்தகுமார் மறைவுக்கு தமிழக ஆளுநர் இரங்கல்

28 August 2020, 11:27 pm
Quick Share

சென்னை: கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வசந்தகுமாருக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த அவரது உடல்நிலை இன்று மோசமடைந்து, இன்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, தமிழக அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு. வசந்தகுமார் அவர்களது மறைவுச் செய்தி அறிந்து துயருற்றேன். அவர் அரசியல் மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்கியவர். தமிழக மக்களின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

Views: - 32

0

0