ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார்: துயரத்துடன் ட்விட்டரில் பதிவு..!!

Author: Aarthi Sivakumar
18 August 2021, 10:01 am
Quick Share

சென்னை: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயாரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் அவர்களின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி இன்று வயது மூப்பு காரணமாக காலமானார்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது தாயார் மறைந்த தகவலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இன்று அதிகாலையில் நான் எனது அன்பான தாயை இழந்து விட்டேன் என்பதை மிகவும் கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

அவருக்கு இறுதி மரியாதை செலுத்த விமானம் மூலம் சென்னை சாலிகிராமத்திற்கு அழைத்து வருகிறோம். சென்னையில் நாளை இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உங்களுடைய வளர்பு தான் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் நல்ல ஒழுக்கங்களை எங்களிடம் விதைத்தது. உங்கள் உணர்வுக்கு எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 374

0

0