செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும்: 4 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் வெளியீடு
29 August 2020, 8:32 pmடெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் நான்காம் கட்டமாக பொதுமுடக்கத் தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 100 பேர் வரை ஒன்று கூடி நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21-ம் தேதிக்கு பிறகு 9 முதல் 12-ம்வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பள்ளிகளுக்கு வரலாம்.
செப்டம்பர் 21-ம் தேதிக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50 சதவிகித ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு அழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி கலையரங்குகள் மற்றும் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் அனுமதி. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்.30 வரை முழு ஊரடங்கு தொடரும். வெளிநாட்டு விமான சேவைகளுக்கு தடை நீடிக்கிறது.
மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநிலஅரசு ஊரடங்கை அமல்படுத் கூடாது. இவ்வாறு 4வது கட்ட ஊரடங்கு தளர்வுகள் மற்றும் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.