சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான நேர்காணல் தற்காலிக ரத்து : தமிழக அரசு அறிவிப்பு

By: Babu
8 October 2020, 7:22 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் உள்ளிட்ட தேர்வு முறைகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்கள் இருந்து வருகின்றன. இதனை நிரப்புவதற்காக, மாவட்ட வாரியாக அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.

பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்காணல் உள்ளிட்ட தேர்வு முறைகளை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் உள்ளிட்ட தேர்வு முறைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

காலி பணியிடங்களுக்கான அதிகளவில் விண்ணப்பித்து மனு அளித்திருப்பதால், நேர்காணல் தேர்வுகளில் ஏராளமானோர் கலந்து கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 279

1

0