வரும் 15ம் தேதி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து…! தமிழக அரசு அறிவிப்பு
14 August 2020, 9:29 amசென்னை: வரும் 15ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மார்ச் இறுதி முதல் நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு இந்த மாதம் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஆனாலும், சில தளர்வுகள் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறப்பு ரயில்கள் தவிர வேறு எந்த போக்குவரத்துக்கும் அனுமதி தரப்படவில்லை. கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அலுவலகங்கள் விதிமுறைகளுடன் குறைந்த அளவிலேயே இயங்கி வருகின்றன.
நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் ஆண்டுதோறும் கிராம சபை கூட்டம் நடைபெறும்.
இந்த முறை கொரோனா பரவல் காரணமாக வழக்கமாக நடைபெறும் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதால், கூட்டத்தை யாரும் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக உள் மாவட்டங்களில் பாதிப்பை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்காள்ளப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.