தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்: சட்டசபையில் இன்று தாக்கல்…!!
Author: Aarthi Sivakumar14 August 2021, 8:44 am
சென்னை: தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையை உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் துறைக்கு என தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் வேளாண் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு அரசின் முதலாவது வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். இயற்கை வேளாண்மைக்கு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று காகிதமில்லா நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை போல இன்றைய பட்ஜெட்டும் காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக இன்று வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள், விவசாய சங்கங்களிடம் கருத்து கேட்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
0
0