குரூப் டான்ஸ், தண்டால் என மாணவர்களை குஷிப்படுத்திய ராகுல் காந்தி..! வைரலாகும் வீடியோ..!

1 March 2021, 4:35 pm
rahul_gandhi_dance_updatenews360
Quick Share

சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக காங்கிரஸ் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர்.

தற்போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரியில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மாணவர்களை ஆனந்தப்படுத்தினார்.

ராகுல் காந்தியின் பள்ளி சுற்றுப்பயணத்தின் போது அவர் தனது நடன திறமையையும் வெளிப்படுத்தினார்.

கன்னியாகுமரியில் உள்ள புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் ஒரு சில மாணவர்களுடன் சேர்ந்து மேடையில் ஒரு குழு நடனத்தில் பங்கேற்று மாணவர்களின் கைத்தட்டலைப் பெற்றார். 

பின்னர் பள்ளி மாணவர்களுடன் சரிக்கு சமமாக போட்டியிட்டு தண்டால் எடுத்ததோடு, ஒற்றைக்கையால் தண்டால் எடுக்க முடியுமா என பள்ளி மாணவியிடம் சவால் விட்டது மாணவர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற கட்சியின் தலைவர்கள் எல்லாம் வந்தோமா தேர்தல் பிரச்சாரம் முடித்தோமா என்றிருக்க, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மன்சூர் அலிகான் அரங்கேற்றிய கூத்துக்களை மிஞ்சும் வகையில், சமையல் செய்வது, மீன் பிடிப்பது, தண்டால் எடுப்பது என ராகுல் காந்தி வித்தியாச பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில், தேர்தலுக்கு முன் இன்னும் என்னவெல்லாம் பார்க்கப்போகிறோமோ என காங்கிரஸ் தொண்டர்களே சலித்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

Views: - 2

1

0