பஞ்சாப்பில் போனா என்ன..? குஜராத் உள்ளாட்சி தேர்தலில் தட்டி தூக்கிய பாஜக…!!!

23 February 2021, 6:29 pm
gujarat bjp - updatenews360
Quick Share

குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக ஒரு சில இடங்களை தவிர்த்து அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், பஞ்சாபில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல், பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.

பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத்திலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. விவசாயப் போராட்டத்தின் தாக்கம் இங்கும் எதிரொலிக்கும் என காங்கிரஸ் கட்சியினர் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில், குஜராத்தில் பாஜகவிற்கான ஆதரவு பெருகியிருப்பதையே இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் காட்டியுள்ளது. மொத்தம் 576 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், தற்போது வரை 389 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 39 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 3 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதாவது, அகமதாபாத் நகராட்சியில் மொத்தம் உள்ள 109 இடங்களில் 99 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 72 இடங்களைக் கொண்ட ராஜ்கோட்டில் 68 இடங்களும், 64 இடங்களைக் கொண்ட ஜாம்நகரில் 50 இடங்களும், 52 இடங்களைக் கொண்ட பவ்நகரில் 44 இடங்களும், 72 இடங்களைக் கொண்ட வதோதராவில் 65 இடங்களும், 73 இடங்களைக் கொண்ட சூரத்தில் 58 இடங்களையும் பாஜக கைப்பற்றியுள்ளது.

குஜராத் உள்ளாட்சி தேர்தல் பெற்ற வெற்றியை பாஜகவினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

Views: - 11

0

0