கள்ளத் துப்பாக்கியால் கொலை முயற்சி : திமுக எம்எல்ஏவுக்கு ஒருநாள் போலீஸ் காவல்!

21 July 2020, 3:58 pm
dmk mla gun shoot 1- updatenews360
Quick Share

செங்கல்பட்டு : நில அபகரிப்பு மோதலின் போது நில உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற வழக்கில் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு ஒருநாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ இதயவர்மனுக்கும், ரியல் எஸ்டேட் அதிபரான சீனிவாசனுக்கு இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக எழுந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், திமுக எம்எல்ஏ இதயவர்மன் தன்னிடம் இருந்த கள்ளத் துப்பாக்கியின் மூலம் சுட்டுள்ளார். இதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திமுக எம்எல்ஏ இதயவர்மனை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார்.

இதையடுத்து, அவர் நாளை வரை போலீஸ் காவலில் வைக்கப்பட உள்ளார். அவரிடம் கள்ளத்துப்பாக்கியை கொண்டு கொலை செய்ய முயன்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.