‘கோமாதா சாபம் பொல்லாதது’ : பீகார் தேர்தலில் லாலு கட்சி பின்னடைவு குறித்து எச்.ராஜா கருத்து..!!!

10 November 2020, 12:41 pm
H raja - - updatenews360
Quick Share

சென்னை : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அக்கட்சி தொடர்பாக பாஜக பிரமுகர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில், பாஜக – ஜேடியூ கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுதுள்ளது. காங்கிரஸ் கூட்டணியை விட சுமார் 30 தொகுதிகள் முன்னிலையில் உள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 129 தொகுதிகளிலும், காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 99 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவுக்கு கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருப்பதால், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, அவர் இந்த முறை தனது மகன் தேஜஸ்வி யாதவை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்துள்ளார்.

இந்த நிலையில், பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவிற்கு, மாட்டுத் தீவன ஊழலே காரணம் என சுட்டிக் காட்டியுள்ளார் பாஜக பிரமுகர் எச். ராஜா.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “மாட்டுத் தீவன ஊழல் குடும்பம் ஒருநாளும் பீகாரில் ஆட்சிக்கு வர முடியாது. கோமாதா சாபம் பொல்லாதது,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 26

0

0