எனக்கு 1000 நண்பர்கள்..! இனிமே ‘நோ’ தனிமை…! ஒரு கலக்கல் டுவீட்..!

25 March 2020, 9:06 pm
Quick Share

சென்னை: 1000 நண்பர்கள் இருக்கின்றனர், இனிமேல் தனிமை என்பதே கிடையாது பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கலக்கல் டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. அதனால் நேற்று முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நள்ளிரவு முதல் ஊரடங்கை அமல்படுத்தினார்.

அதன் படி ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பித்து இருக்கிறது.

இந்நிலையில்,  பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தமது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கலக்கல் பதிவை வெளியிட்டு உள்ளார். அவர் அதில் கூறி இருப்பதாவது:

இன்னமும் 20 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியுள்ளதால் நம் ஒவ்வொருவருக்கும் நம்மோடு இருக்கும் நண்பன் library தான். மாதிரிக்கு சில புத்தகங்கள் என்று ஒரு பதிவிட்டுள்ளார்.