பா.ஜ.கவில் உழைப்பவர்களுக்கு எத்தகைய பதவியும் கிடைக்கும்… விரைவில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் : கரு. நாகராஜன்

7 July 2021, 6:33 pm
murugan - karu nagarajan- updatenews360
Quick Share

சென்னை : தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று பாஜக நிர்வாகி கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், அந்தப் பொறுப்புக்கு எல்.முருகன் நியமிக்கப்பட்டார். அவர் பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்தே, திராவிடக் கட்சி தலைவர்களை தனது கட்சியில் சேர்க்க ஆரம்பித்தார். மேலும், முன்பை விட பாஜகவிற்கு செல்வாக்கை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

கடவுள் முருகனின் கந்த ஷஷ்டி கவசத்தை இழிவாகப் பேசிய கருப்பர் கூட்டத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தி, அனைத்து கட்சியினரையும் கையில் வேலை எடுக்க வைத்தார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த 20 தொகுதிகளில் போஜக போட்டியிட்டது. அதில் 4 இடங்களை வென்று பாஜக சரித்திரம் படைத்தது. ஆனால், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவை விரிவாகத்தில் எல்.முருகனுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இதனை சென்னையில் உள்ள தமிழக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கரு.நாகராஜன், “மாற்றி அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில், எல்.முருகன் பெயர் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இல்லை. இந்த தவிப்பு அனைவரிடத்தும் இருந்தது. தற்போது அந்த குறை நீக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.கவில் உழைப்பவர்களுக்கு எத்தகைய பதவியும் கிடைக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார். அ.தி.மு.க புறக்கணிக்கப்பட்டுள்ளது என சொல்வது சரியல்ல,” எனக் கூறினார்.

Views: - 161

0

0