டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்..? காசிம் சுலைமானியை கொன்றதற்கு பதிலடி..! பரபரப்பு பின்னணி..!

29 June 2020, 8:52 pm
Donald_Trump_UpdateNews360
Quick Share

ஜனவரி மாதம் அதன் உயர்மட்ட தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக ஈரான் அரசாங்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கைது வாரண்ட் பிறப்பித்ததாகவும் ரெட் கார்னர் அறிவிப்பை வெளியிட இன்டர்போல் அமைப்பை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரம்ப் கைது செய்யப்படும் அபாயத்தை எதிர்கொள்ளவில்லை என்றாலும், உலக நாடுகளுடனான ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் ஒருதலைப்பட்சமாக அமெரிக்காவை விலக்கியதிலிருந்து ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அதிகரித்த பதட்டங்களை இந்த குற்றச்சாட்டுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

பாக்தாத்தில் ஜெனரல் காசிம் சுலைமானியைக் கொன்ற ஜனவரி 3 தாக்குதலில் ஈடுபட்டதாக டிரம்ப் மற்றும் 30’க்கும் மேற்பட்டோர் கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை ஈரானில்  எதிர்கொள்கிறார்கள் என்று வழக்கறிஞர் அலி அல்காசிமெர் கூறியதாக அரசு நடத்தும் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்ரம்பைத் தவிர வேறு யாரையும் அல்காசிமெர் அடையாளம் காணவில்லை. ஆனால் ஈரான், ட்ரம்ப் ஜனாதிபதி பதவி முடிவடைந்த பின்னரும் தனது வழக்கைத் தொடரும் என்று வலியுறுத்தினார்.

பிரான்சின் லியோனைத் தளமாகக் கொண்ட இன்டர்போல், கருத்துக் கோரியதற்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

டிரம்ப் மற்றும் மற்றவர்களுக்காக ஈரான், ஒரு ரெட் கார்னர் அறிவிப்பை வெளியிடுமாறு கோரியதாக அல்காசிமெர் மேற்கோளிட்டுள்ளார். எனினும் இந்த அறிவிப்புகள் சந்தேக நபர்களை கைது செய்ய அல்லது ஒப்படைக்க நாடுகளை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் அவர்களின் பயணத்தை மட்டுப்படுத்தலாம்.

“இது ஒரு பிரச்சார ஸ்டண்ட். யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஈரானியர்களை முட்டாளாக்க மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது” என்று ஈரானுக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி ஹூக் கூறினார்.

Leave a Reply