அவருக்கு இப்ப எப்படி இருக்கு : நடிகர் விவேக் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்த அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

16 April 2021, 3:31 pm
Vijayabaskar - vivek - updatenews360
Quick Share

சென்னை : மாரடைப்பு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காதவாறு அவருக்கு இன்று நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் மகள் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது இதய செயல்பாட்டை சீராக்க, தற்போது எக்மோ கருவியின் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார்.

இதன்பிறகு, அவர் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவில், “நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது பற்றி தகவல் அறிந்து மிகவும் வருந்திகிறேன். என்னுடைய பிரார்த்தனைகளும் வாழ்த்துகளுக்கும் உங்களுக்கு உண்டு. சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர்களிடம் பேசினேன். சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் தொடர்பில் உள்ளேன். விரைவில் நலம்பெற வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.

Views: - 26

0

0