தமிழகத்தை வி(மி)ரட்டும் கனமழை: 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…உங்க மாவட்டத்துல என்ன நிலவரம்..!!

Author: Rajesh
13 November 2021, 8:36 am
Quick Share

சென்னை: அந்தமானில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. மழை ஓய்ந்தது இயல்பு நிலைக்கு திரும்பலாம் என மக்கள் நினைத்திருந்த நிலையில், இன்று அந்தமானில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

Image

இது நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Image

அதன்படி, இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 300

0

0