வட தமிழகத்தில் கன மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

26 November 2020, 5:33 am
chennai metrology - updatenews360
Quick Share

சென்னை: ‘நிவர்’ தீவிர புயல் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழந்து அதிக மழையை தர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அதி தீவிர புயலாக நள்ளிரவு கரையைக் கடக்கத்தொடங்கிய நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்து நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது,

அதி தீவிர புயல் நிவர், புதுவை அருகே நேற்று இரவு 11.30 மணிக்கும் இன்று அதிகாலை 2.30 மணிக்கும் இடைப்பட்ட காலத்திற்கு இடையே கரையக் கடந்தது. அதிகாலை 4 மணியளவில் புயல் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது அது வலுவிழந்து தீவிர புயலாக உள்ளது.

தொடர்ந்து இந்தப் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்து வரும் 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் மழை தொடரும். பலத்த காற்றும் வீசக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0