ராணுவ வீரர்களுக்கு பிரியா விடை… நெஞ்சை உலுக்கிய இறுதி ஊர்வலத்தின் முக்கிய புகைப்படங்களின் தொகுப்பு…!!

Author: Babu Lakshmanan
10 December 2021, 5:42 pm
Quick Share

புதுடெல்லி: மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கின் போது நெஞ்சை உலுக்கிய புகைப்படங்களை தற்போது காணலாம்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Bipin Rawat - Updatenews360

விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், ராணுவ விமானத்தின் மூலம் உடல்கள் தலைநகர் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்களின் உடல்களும் அவர்களின் உறவினர்கள், ராணுவ அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது.

டெல்லியில் உள்ள பிரார் சதுக்கத்தில் உள்ள சுடுகாட்டில் முழு ராணுவ மரியாதையுடன் பிபின்ராவத்தின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. மகள்களின் இறுதிச் சடங்கிற்கு பிறகு இருவரின் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் உடல்களும் ஒரே தகன மேடையில் வைக்கப்பட்டு எரியூட்டப்பட்டது.

ராணுவ வீரர்களின் இறுதி ஊர்வலத்தின் நெஞ்சை உருக்கிய சில புகைப்படங்களை காணலாம்.

Views: - 354

0

0