100 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ ஹெராயின் கடத்தல்..! ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது..!

7 May 2021, 9:13 pm
rs_100_crore_heroin_chennai_updatenews360
Quick Share

சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ ஹெராயின் சென்னை விமான நிலையத்தில் இன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக இரண்டு தான்சானிய நாட்டினர் கைது செய்யப்பட்டதாக சுங்கத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த அடிப்படையில், சுங்கத் துறை 46 வயதுடைய ஒரு பெண்ணையும் அவரது 45 வயது கூட்டாளியையும் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அவர்கள் மழுப்பியுள்ளனர்.

இதையடுத்து அவர்களிடம் முறைப்படி நடத்தப்பட்ட விசாரணையின் மூலம், போதைப்பொருள் மீட்கப்பட்டதாக சுங்க ஆணையர் ராஜன் சவுத்ரி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். .

ஹெராயின் பாக்கெட்டுகளில் மறைக்கப்பட்டிருந்தது மற்றும் போதைப்பொருளிலிருந்து வெளிப்படும் வாசனையை மறைக்க சில காரமான தூள் தெளிக்கப்பட்டிருந்தது என அவர் கூறினார்.

இந்த பறிமுதல் சமீபத்திய காலங்களில் சுங்கத் துறையால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய சரக்காகும் என்று அவர் கூறினார்.

பெங்களூருவில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு தனது உதவியாளருடன் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வதாகக் கூறி, அந்த பெண் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டதாக அறியப்படுகிறது.

இருவரும் பெங்களூருக்கு நேரடி விமானம் கிடைக்காததால் அவர்கள் சென்னையில் தரையிறங்கிய நிலையில் சோதனையில் சிக்கியதால் கைது செய்யப்பட்டனர்.

Views: - 109

0

0