தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?: உயர்நீதிமன்றம் கேள்வி…

Author: Aarthi
14 October 2020, 4:19 pm
highcourt - updatenews360
Quick Share

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. 8 மாதங்கள் ஆகியும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தனியார் மற்றும் சில அரசுப்பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறக்க வாய்ப்பு உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வரும் நவம்பர் 11ம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்விக்கட்டணம் வசூலிக்க அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 39

0

0